கோடை கால விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு
ரயில்வே அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால
விடுமுறை அளிக்கப்படுவதால் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு படையெடுப்பர்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைப்பதும்
பெரும் பாடாகிவிடுகிறது.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்திவிடுகின்றன. இந்தப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த அரசு தவறிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்ஜெட்டுக்குள் பயணம் என்றால் நடுத்தர மக்களின் தேர்வு ரயில்கள் தான். அதிலும் கூட்ட நெரிசல், ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்துவிடுவது, ஏஜெண்டுகள் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது ஆகிய பிரச்சினைகள் உள்ளன.
இதனால் கோடை கால சிறப்பு ரயில்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு எப்போது வரும் என காத்திருந்த பயணிகள் கீழே காணும் தகவல்களை குறித்துக்கொள்ளுங்கள்.
கோடைகால விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்காக சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும், நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு, ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் மே மாதம் 6, 13,20, 27 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், ஜூலை 1ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 7, 13, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் ஜூலை 2ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கேரளா எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 6, 13, 37 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்வதற்கு ஏப்ரல் 5,12, 19, 26 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் ஜூன் மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் ஜூன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக ஏப்ரல் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 1, 8, 15, 23, 29 ஆகிய தேதிகளிலும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக