Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

வெளிநாட்டு வீரர்கள் இல்லாத ஐபிஎல்! கசிந்த பிசிசிஐ வட்டார தகவல்


 Image result for ipl 2020
லகளவில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர்  இந்திய வருவதற்கு வழங்கப்பட்டு வந்த விசா  வரும் ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால்  ஐபிஎல் டி20 போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும்ஏப்.15ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்  என ஒரு பக்கம் பிசிசிஐ வட்டாரங்களில் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இருந்தாலும் பிசினஸ் ஸ்போர்ட்ஸ் விசாவில் வெளிநாட்டு வீரர்களை வரவழைக்கும் முயற்சியையும் பிசிசிஐ எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்  வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா?  அதே போல ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற பல கேள்விகளுக்கு நாளை மும்பையில் நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக