![வெளிநாடு செல்ல இலங்கை மக்களுக்கு திடீர் தடை; காரணம் என்ன? வெளிநாடு செல்ல இலங்கை மக்களுக்கு திடீர் தடை; காரணம் என்ன?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/03/11/156311-emptyairport.jpg)
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச்
செல்ல வேண்டாம் என இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தற்காலிக தடை விதித்துள்ளது.
கொரோனா
வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டு மக்கள்
யாரும் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வேலை வாய்ப்பு பணியகம்
தம் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக
இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்.,
தொழில் வாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு
பெருமளவு இலங்கையர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர். குறித்த நாடுகளில் கொரோனா
தொற்று தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்
மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.
இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும்
தொழிலாளர் உறவுகள் அமைச்சம் இந்த முடிவை கலந்து ஆலோசித்து எடுத்திருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களைப்
பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள்
தொடர்பில் அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு தூதரகங்களிடமும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான
தகவல்கள் தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும், இதுதொடர்பான மேலும்
தகவல்களுக்கு மக்கள் 1989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மேலதிகமாக இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக