ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் கவலை வேண்டாம்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலரும் பொருளாதார ரீதியாலான சிரமத்தை அனுபவித்து வருகின்றனர், குறிப்பாக ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சேவை ஏப்ரல் 20ம் தேதி வரை துண்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல்-ஐ தொடர்ந்து ஏர்டெல் எடுத்த முடிவு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்பொழுது, ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏர்டெல்லின் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் பேக் செல்லுபடி காலத்தை தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் நீட்டிப்பு செய்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உத்தரவுப்படி, வரும் ஏப்ரல் 17, 2020 வரை இந்த நீட்டிப்பு செல்லுபடியாகும்.
அனைவருக்கும் இலவச ரீசார்ஜ்அதுமட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்கம்மிங் அழைப்பு வசதியுடன், தனது 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 மதிப்பிலான ரீசார்ஜ் வழங்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் பயனர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பயன்படுத்தி தங்கள் சேவையை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இலவசம் ஆனால் பின்னாடி கண்டிப்பா செலுத்திடனும்
மக்களின் இக்கட்டான சூழ்நிலையில் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால், இந்த ஊக்கத்தொகையான ரூ.10 ரீசார்ஜ் நன்மையை வாடிக்கையாளர்கள் இப்பொழுது பயன்படுத்திக்கொண்டு, இதற்கான கட்டண தொகையை வாடிக்கையாளர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
48 மணி நேரத்தில் நடைமுறைக்கு வரும் திட்டம்சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கணக்குகளில் இந்த ஊக்கத்தொகை நன்மை ரூ.10 மதிப்பிலான டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த 48 மணி நேரத்தில் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதுபோன்ற நன்மையை வழங்குமா?
பிஎஸ்என்எல் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜியோ உள்ளிட்ட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இதுபோன்ற அறிவிப்பை விரைவில் வெளியிடவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக