Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 மார்ச், 2020

WhatsApp Group-க்கு சம்பந்தமே இல்லாதவர்கள் நம்மை கண்காணிக்க வாய்ப்பு.! எப்படி தவிர்க்கலாம்



 Image result for whatsapp
மீபத்தில் வாட்ஸ் அப் செயலி மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டை சந்தித்தது. வாட்ஸ் அப் குரூப்களில் நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இல்லாத வெளியாட்கள் சம்பந்தமே இல்லாமல் Group Chat-களை பார்க்க கூடிய அபாயம் ஏற்பட்டது.
பரவிய Invitation Links..
ஆனால் தற்போது இந்த ஆபத்தை தடுக்கும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு அது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் Private Group Chat-களுடன் Invitation Link-குகள் கூகுளில் பரவுவதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட Link-குகள் கூகுளில் உலவுவதாக கூறப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யார் வேண்டுமானாலும்..!
இதனால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களை யார் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. Invite to Group via Link என்பதை பயன்படுத்துவதால் வாட்ஸ்அப் குழுவிற்கே தொடர்பில்லாத ஒருவர் கூகுள் சர்ச் மூலமாக Keywords-ஐ பயன்படுத்தியே ஒரு குழுவுக்குள் நடக்கும் உரையாடல்கள், மொபைல் எண்கள் ஆகியவற்றை கண்காணிக்கலாம் என்ற நிலை உருவானது.
எதனால் ஆபத்து?
வாட்ஸ்அப் குரூப்களில் உறுப்பினர்களை சேர்க்க பொதுவான ஒரு தளத்தில் ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனை வெளியிடுவதால் இந்த மிக பெரிய ஆபத்து நேர்கிறது. இது மிகப்பெரிய தரவு மீறலாக பார்க்கப்பட்டது. இதற்கு வாட்ஸ் அப் குரூப்பில் சேர கோரும் அழைப்புகளை Link மூலமாக அனுப்புவதும், அதை பொதுவெளியில் பகிர்வதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் Group-களில் வெளியாட்கள் நுழைவதை தடுக்க முக்கியமாக நாம் செய்ய வேண்டியது, Private Group-ல் சேர அழைப்பு விடுக்கும் Invitation Link-குகளை தவிர்ப்பதே. வாட்ஸ் அப் குரூப்களில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமெனில் அதற்கு சிறந்த வழி, தொலைபேசி எண்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பதே.இதுவே பாதுகாப்பான வழியும் கூட
இருப்பினும் நீங்கள் வாட்ஸ் அப் Group-களில் சேர Invitation Link-குகளை உருவாக்கிவிட்டு இப்போது கவலைப்படுகிறீர்களா? வெளியாட்களால் தனியுரிமை மீறல் அல்லது தரவு திருட்டு நிகழுமோ என்ற பயத்தில் உள்ளீர்களா? இதை தவிர்க்கவும் ஒரு வழி கூறப்பட்டுள்ளது.
தவிர்ப்பது எப்படி.?
அதன்படி ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய Invitation Link-குகளை Reset செய்யலாம். இதற்கு குறிப்பிட்ட வாட்ஸ்அப் Group-க்கு சென்று, Group name-ஐ Tap செய்ய வேண்டும். Group Info settings என்பதற்கு கீழே "Invite to Group via Link" (இணைப்பு வழியாக குழுவிற்கு அழைக்கவும்) என்ற விருப்பத்திற்கு செல்ல வேண்டும். அங்கே "Reset Link" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
 பாதுகாப்பான வழி..
இதன் மூலம் குறிப்பிட்ட Group-ன் Invitation Link, Reset ஆகிவிடும். இதனால் பழைய Invitation Link காலாவதியாகிறது. புதிய Invitation Link உருவாகிறது. Group-ல் சேர யாராவது முந்தைய Invitation Link-ஐ பயன்படுத்தி முயற்சித்தால் அது தோல்வியடையும்.
இருப்பினும், ஏற்கனவே கூறியபடி வாட்ஸ் அப் Private Group-ல் உறுப்பினர்களை சேர்க்க Invitation Link உருவாக்குவதை தவிர்த்து, தொலைபேசி எண்களை போனில் Save செய்து பின்னர் தேவைப்படும் Groupக்கு சென்று குறிப்பிட்ட நபர்களை சேர்த்து கொள்ளலாம்.வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், சுய விவரங்களை பாதுகாத்து கொள்ளவும் நினைத்தால் இதுவே சிறந்த பாதுகாப்பான வழி என பரிந்துரைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக