கொரோனா குறித்த பரப்பப்படும் வாட்ஸ்அப்
செய்திகள் போலி என சந்தேகித்தால், உடனே அதனை தங்கள் வாட்ஸ்அப் ஹாட்லைன் எண்ணான +91
8799711259-க்கு அனுப்ப வேண்டும் என பத்திரிக்கை தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா
குறித்த அச்சம் நாட்டு மக்களிடைய பெரிதளவில் அதிகரித்து வரும் நிலையில்.,
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நிலைமையை உணர வைக்கும்
வகையிலும் இந்திய அரசு வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.
அந்த
வகையில்., கொரோனா வைரஸ் அல்லது COVID-19 பற்றி உங்களிடம் ஏதேனும் கேள்விகள்
இருந்தால், பிரபலமான உடனடி செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் மூலம் தெரிந்துக்கொள்ள
இந்திய அரசு அதிகாரப்பூர்வ சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. MyGov Corona
Helpdesk என்று அழைக்கப்படும் இந்த வாட்ஸ்அப் சாட்போட், அனைத்து வாட்ஸ்அப்
பயனர்களுக்கும் கிடைக்கிறது.
இந்த
சேட்போட் உடன் பேச பயனர்கள் தங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகள் பட்டியலில் +91
9013151515 என்ற எண்ணை சேமிக்க வேண்டும், பின்னர் வினவலுக்கான பதிலைப் பெற
வாட்ஸ்அப்பில் இந்த போட்டுக்கு ஒரு செய்தியை அனுப்பவும். இந்த போட் உருவாக்கும்
பதில்கள் தானாகவே இயங்கும், இந்த கருத்து வேகமாக பரவி வரும் இந்த நோயைப் பற்றி
மக்களிடம் இருக்கக்கூடிய பெரும்பாலான கேள்விகளைப் பற்றி தெளிவுபடுத்தி சரியான
தகவல்களை அளிப்பதாகும்.
அதேவேளையில்
வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் கொரோனா தொடர்பான செய்திகள் போலியாக இருக்குமோ என
சந்தேகிக்கும் பட்சத்தில் அந்த செய்திகளை +91 8799711259-க்கு அனுப்ப வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா
வைரஸுக்கு சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து உங்களை
காப்பாற்றக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட வாட்ஸ்அப்பில் தவறான தகவல்கள்
மற்றும் போலி செய்திகள் பரவலாக இருக்கும் நேரத்தில் இது ஒரு நல்ல நடவடிக்கையாக
பார்க்கப்படுகிறது.
இந்த
வாட்ஸ்அப் சாட்போட்டைத் தவிர, அரசாங்கம் ஒரு கொரோனா வைரஸ் தேசிய ஹெல்ப்லைன்
எண்ணையும் (+ 91-11-23978046 மற்றும் கட்டணமில்லாமல் 1075) அமைத்துள்ளதுடன்,
குடிமக்கள் தொடர்பு கொள்ளக்கூடிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியையும் (ncov2019@gov.in)
அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸைப் பற்றிய எந்தவொரு வினவல் அல்லது
தெளிவுபடுத்தல் குறித்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக