Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஏப்ரல், 2020

நிவாரணத் தொகையான ரூ.1000 போதாது ! மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை

நிவாரணத் தொகையான ரூ.1000 போதாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,விலையேற்றத்தைத் தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திட வேண்டும் . அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும்.

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.கொரோனாவைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதிமுக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!