Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஏப்ரல், 2020

அக்கா வி மிஸ் யூ ... மாத மாதம் ரூ.1,05,000 கொடுக்க முன்வந்த தமிழிசை!!

தெலுங்கனா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சம்பளத்தில் இருந்து 30% தொகையை எடுத்துக்கொள்ளும் படி கூறியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இன்னும் 7 நாட்களில் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஊரடங்கு முடியும் நாளன்று கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரக்கூடும் என புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக அந்த மாநிலங்களும், மத்திய அரசும் ஒரு தொகையை பெற்று வருகிரது. அந்த வகையில், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாட்டில் நிலைமை சரியாகும் வரை தனது சம்பளத்தில் இருந்து 30% அதாவது ரூ.1,05,000-ஐ எடுத்துக்கொள்ளும் படி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
இதற்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்து தமிழிசை அப்போது முதலே தமிழ் மக்களால் அக்கா என்றே அன்புடன் அழைக்கப்பட்டார். தற்போது அவரின் இந்த செயல் தமிழக, தெலங்கானா மக்களை கவர்ந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக