உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது. இந்நிலையில், இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, இந்தியா, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இந்த மாத்திரை பாக்கெட்டுகள், இங்கிலாந்து சென்றடைந்தது. இதுகுறித்து, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் ட்ரஸ் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த பாடுபட்ட இந்திய, இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவை முறியடிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம் என்றும், இந்தியா அனுப்பி வைத்த மாத்திரை பாக்கெட்டுகள் விரைவில் இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், சில்லரை மருந்தகங்களுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக