ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா
கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த சாதனம்.
ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ் அன்லாக் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக