பஜாஜ் நிறுவனம் டாமினார் 400 பிஎஸ்-6 மாடல் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை, கட்டமைப்பு, வடிவமைப்பு சார்ந்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
அதன்படி, பிஎஸ்4- டாமினார் 400 மாடலைக் காட்டிலும் பிஎஸ்-6 பைக் ரூ. 1,749 விலை கூடுதலாக பெற்றுள்ளது. கடந்த ஓராண்டுகளாக வாகனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை உணர்ந்து கொண்ட பஜாஜ் நிறுவனம், புதிய பிஎஸ்-6 டாமினார் 400 மாடலுக்கு சொற்பமான அளவில் கூடுதல் விலையை நிர்ணயம் செய்துள்ளது.
பிஎஸ்-6 மாடலுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதை தவிர, இந்த பைக்கில் வேறு எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. முந்தைய பிஎஸ்-4 மாடலுக்கு இணையான அளவிலேயே புதிய பஜாஜ் டாமினார் 400 மாடல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதன்படி, பிஎஸ்6 மாடல் அதிகப்பட்சமாக 40 பிஎஸ் பவர் மற்றும் 35 என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. பைக்கின் எஞ்சினுடன் ஸ்ளிப்பர் கிளட்ச்சுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.
பைக்கின் முன்புறத்தில் இடம்பெற்றுள்ள யுஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் உள்ள மோனோஷாக் யூனிட் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. பிஎஸ்6 டாமினார் 400 மாடலின் மொத்த எடை 187 கிலோ. இதில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் டாமினார் 400 பைக்கிற்கு சரிநிகர் போட்டியாளராக எந்த பைக்கையும் குறிப்பிட முடியாது. எனினும், இந்தியாவின் வாகனச் சந்தையில் இந்த பைக் சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் 250, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் கேடிஎம் 250 டியூக் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு விற்பனையில் போட்டி மாடலாக விளங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக