Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ரூ.5கோடி நிதி உதவி !

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை 18,65,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,15,138 பேர் உயிரிழந்துள்ளனர். 4,331,915 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவினால் இதுவரை 324 பேர் பலி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,352 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பலரும் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பிரதமர் நிவாரண நிதிக்கு விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள்,அறக்கட்டளை  என பலரும் உதவிவருகின்றனர்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்திம் சீஇஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடியை இந்தியாவில் கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக  கூகுள் நிறுவனம், 800 மில்லியன் அமெரிக்க டாலரை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக