Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஏப்ரல், 2020

6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


ரூ12,720என்கிற

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் உடன் ஹானர் பிளே 9ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த மாடல் சீனாவில்

மட்டும் வெளிவந்துள்ளது, விரைவில் அனைத்து இடங்களிலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

இந்த ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹிலீயோ பி335 சிப்செட் வசதி

இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி கேமரா என மொத்தம் இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசிதி உள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 30எஸ் சாதனத்தில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. குறிப்பாக ரூ12,720என்கிற விலைமதிப்பில் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!