Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஏப்ரல், 2020

சும்மா இருக்க போர் அடிக்குது: நம்ம ஏரியால 15பேருக்கு கொரோனா- வதந்தி கிளப்பிய பெண்!


வாட்ஸ் ஆப்பில் வதந்தி

தனது பகுதியில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெண் ஒருவர் வதந்தி கிளப்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் ஆகியோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வேண்டுகோள்

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி செய்யும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக பிஎம் கேர் என்ற தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாட்ஸ் ஆப்பில் வதந்தி

இந்த நிலையில் கொல்கத்தா நியூ அலிபூர் பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஞாயிறுக் கிழமை அன்று வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தான் இருக்கும் பகுதியில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் இதை வெளிப்படுத்த மாநில அரசு மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பத்துள்ளார்.

 கைது செய்த போலீஸ்

வாட்ஸ் ஆப்பில் பரவிய இந்த வதந்தி குறித்து அந்த பகுதியில் இருந்த சிலர் அப்பகுதி போலீசாரிடம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என அரசு தொடர்ந்து வலியுறத்தி வருகிறது. அப்படி மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக