Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 1 ஏப்ரல், 2020

நான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் நான்கு ரியர் கேமரா, அருமையான சிப்செட் வசதி,சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

அருமையான சிப்செட் வசதி

இந்த ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 7என்எம் கிரிண் 820 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-ஜி57எம்பி6 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

16எம்பி செல்பீ கேமரா

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 40வாட் பாஸ்ட் சார்ஜிங் வசிதி உள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ac (2.4GHz / 5GHz), புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. குறிப்பாக ரூ25,740என்கிற விலைமதிப்பில் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!