கொரோனாவால் இத்தாலியில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலிய மக்கள் பணத்தை வீதிகளில் வீசியதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தாலி பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் வேதனையடைந்த இத்தாலி மக்கள் இனி பணத்தால் பிரயோஜனமில்லை என தங்களிடம் இருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசியதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால் அந்த புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது அல்ல என தெரிய வந்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு வெனிசுலாவில் புதிய பண நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அதற்கு முன்னர் புழக்கத்தில் இருந்த நோட்டுகளை மக்கள் வீதிகளில் வீசி சென்ற சம்பவத்தின் புகைப்படம்தான் அது என தெரிய வந்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக