ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்ய அருகில் உள்ள ஏடிஎம் மையத்தை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சிரமம் இல்லாத சேவையை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை என்றாலும் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் துண்டிக்கப்படாமல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை செயல்பாடில் இருக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனனும், ஏப்ரல் 17 ஆம் தேதி வரை செயல்படும் என ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது.
ஆனால், ஜியோவோ மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிப்போர் அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று அங்கேயே உங்கள் ஜியோ மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போலவே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எளிமையாக ரீசார்ஜ் செய்யலாம் எனதெரிவித்துள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் சற்று கடுப்பில் உள்ளார்கள். ஏனெனில் மற்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என கூறும் நிலையில் இப்படியும் ரீசார்ஜ் செய்யலாம் என ஜியோ சேவையை வழங்கியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக