கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலையானது தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
சிறைச்சாலையானது, புதுசேரி அரசு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்காலிக சிறையாக மாற்றப்படும் அரசு கல்லூரியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழுவும் அமைக்கப்பட உள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக