Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

ஆன்லைனில் கிடைக்கும் தேவையில்லாத பொருட்கள்...

இன்று ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என்பது எல்லோருக்கும் ஒரு பேஷனாகிவிட்டது. பலர் ஆன்லைனில் பல விதமான பொருட்களை ஆர்டர் போட்டு வாங்குகின்றனர். 

சிலர் ஆன்லைன் ஆர்டர் என்ற விஷயத்திற்கே அடிமையாகிவிட்டனர். அந்த வகையில் இந்த பதிவில் ஆன்லைனில் இருக்கும் ஒன்றுக்கு உதவாத பொருட்களை பற்றி பார்க்கப்போகிறோம். 

இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என இவர்கள் ஆன்லைனில் லிஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

டேப்
90ஸ் கிட்ஸ்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இன்று எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இன்றும் ஆன்லைனில் பழங்கால ரேடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் டேப்கள் விற்பனைக்கு உள்ளது. இந்த டேப்களை எல்லாம் யார் வாங்குவார்கள் என்று தெரியவில்லை.

ஸ்மார்ட் நகம்
இன்று ஸ்மார்ட் போன், வாட்ச்எல்லாம் வந்துவிட்ட நிலையில் ஸ்மார்ட் நகமும் வந்துவிட்டது. இது ம் நகரத்திற்கு மேலாக பொருந்தக்கூடிய என்எஃப்சி வசதி கொண்ட சார்ஜ் செய்ய தேவையில்லாத ஸ்மார்ட் நகம், இந்த நகத்தை அணிந்து கொண்டால் நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனை என்எஃப்சி உதவியுடன் இணைக்கலாம் ஆனால் இணைப்பதால் என்ன நடக்கும் என கேட்டீங்கன்னா அது அவர்களுக்கே தெரியவில்லை.

அணிந்து கொள்ளும் குடை
தோளில் பைகளை அணிந்து செல்போது போன குடை ஒன்றுவடிவமைக்கப்பட்டுள்ளது. குடை என்பது நாம் அதிக வெயில் இருந்தாலோ அல்லது மழை பெய்தாலோ பயன்படுத்துவோம் 17ம் நூற்றாண்டிலிருந்தே இந்த குடை என்பது மக்கள் கையில் பிடித்து செல்லும் படி தான் இருக்கிறது. இப்படி தோள்களில் போட்டு செல்லும்படி செய்வதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நாம் எப்பொழுதும் குடையை முதுகில் சுமந்து கொண்டே திரிய வேண்டும் என்றா?

வாய்க்கு பயிற்சி
நீங்கள் தினமும் எழுந்து காலையில் உடற்பயிற்சி செய்வதற்காக நடை பயிற்சி செய்வீர்கள், அல்லது ஜிம்மிற்கு சென்று பல விதமா பயிற்சிகளை செய்வீர்கள். ஆனால் என்றாவது உங்கள் வாய்க்கு பயிற்சி செய்துள்ளீர்களா? அதற்காக ஒரு தயாரிப்பு வாய்லைனில் விற்பனையாகிறது. இதை நீங்கள் வாயில் வைத்து மெல்ல வேண்டுமாம் அது தான் பயிற்சியாம்.

புதிய குடை
இதை பார்த்தீர்களா? குடையை கையில் படிக்க சோம்பேறித்தனம் பட்ட ஒருவன் கண்டுபிடித்தது தான் இந்த குடை என நினைக்கிறேன். இந்த மாதிரியான பிளாஸ்டிக்கை நாம் அணிந்து கொண்டால் நிச்சியம் நனைய மாட்டோம். ஆனால் மழை பெய்யாமல் இருக்கும் போது இவ்வளவு பெரிய பொருளை எங்கே வைப்பது?

புனித நீர்
பாதிரியார்களால் ஆசிர்வாதம் செய்யப்பட்ட புனித நீர் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளது. இது புனிதமானது தெய்வ தன்மை மிக்கது என்பதற்கான சான்றிதழ்களும் இந்த நீருடன் வருகிறது. அமெரிக்காவில் இந்த பொருட்கள் விற்பனையாகிறது.

பாக்கெட்
நீங்கள் வெளியில் செல்லும் போதும், அல்லது உங்களது செல்போனை, பர்ஸ்களை எங்கே வைப்பீர்கள் பாக்கெட்டில் தானே. ஆனால் பாக்கெட்டே இல்லா டிரெஸ் அணிபவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்காவே ரெடிமேட் பாக்கெட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பாக்கெட்டை நீங்கள் எந்த உடை உடன் வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம். அதில் உங்களுக்கு தேவையான பொருட்களை வைத்துக்கொள்ளலாம்.

கை கிளவுஸ்
சாதாரணமா கை கிளவுஸ்கள் ஆன்லைனில் விற்பது சாதாரணம் தான் ஆனால் இந்த கிளவுஸ்கள் கார்டனிங் கிளவுஸ்களாம். நீங்கள் தோட்டத்தில் குழி தோண்டும் போது குழியில் உள்ள மண்ணை அள்ளி வெளியே போடும் போதுஅதில் உள்ள கைகளில் மண் ஆகாமல் இருகு்க இந்த கிளவுஸை பயன்படுத்த வேண்டுமாம் கொஞ்சம் வித்தியசமாக இருக்கிறது அல்லவா?


சிகரெட் லைட்டர்
இன்று மொத்தமாக சிகரெட் வாங்கினால் அதை ஒரு பெட்டியில் வைத்து தான் அனைத்து சிகரெட்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தனியாக சிகரெட் ஹோல்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹோல்டர் 10 சிகரெட்டை வைத்துக்கொள்ளும் அளவு கொண்டது. இதில் கீழ் உள்ள பட்டனை அழுத்தினால் ஒரு சிகரெட் வெளியே வரும். இந்த லைட்டரில் முக்கியமானது என்னவென்றால் சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரும் இதனுடனேயே வருகிறது. இதை விலையை கேட்டால் உங்களுக்கே தலை சுற்றி விடும்.


காப்பர் கம்பி
நாம் வயர்களில் உள்ள காப்பர் கம்பிகள் இருப்பது நமக்கு தெரியும் அது தான் கரெட்டை கடத்துகிறது என்பதும் நமக்கு தெரியும் ஆனால் ஆன் லைனில் L வடிவ காப்பர் கம்பிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை வைத்து என்ன செய்வார்கள் என கேட்காதீர்கள் அது யாருக்கும் தெரியாது.

பன்றி கால் ஊறுகாய்
எலுமிச்சையில் ஊறுகாய், நார்த்தை, மாங்காய் ஊறுகாய் கூட கேள்வி பட்டிருப்போம். ஆனால் பன்றி கால் ஊறுகாய் கேள்வி பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு பொருள் ஆன்லைனில் விற்பனையாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக