உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா இனிதான் வேகமாக பரவ இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டுள்ளது. மேலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் உலகளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “கடந்த 1918ல் உலகம் முழுவதும் பரவி 10 கோடி உயிர்களை பலி கொண்ட ஸ்பானிஷ் ப்ளூ வைரஸுக்கு நிகரானது கொரோனா. கொரோனா நோய் தொற்றின் கோரமான பாதிப்புகளை இனிதான் நாம் காண இருக்கிறோம். தற்போது மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் இருப்பதால் முடிந்தளவு நம்மை காத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக