முதுமையடையாமல், இளமையை வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது இளமையை தக்க வைத்துக் கொள்வதை தான் விரும்புகின்றனர். ஆனால், இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் தானாகவே நம்மை அடைய செய்கிறது. தற்போது இந்த பதிவில் இளமையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் நமது இளமையை தக்க வைத்து கொள்ள தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கேரட் உடல் ஆரோக்யத்தை மேம்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த கேரட்டை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால் நாம் நமது இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தக்காளி ஜூஸ்
தக்காளி நாம் சாதாரணமாக சாயப்பிடுவதுண்டு. இதனை சமையலுக்கு மட்டுமல்லாது, சில சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கும் பயன்படுத்துகிறோம். இத்தகைய தக்காளியை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால், அவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முதுமையை தடுத்து, இளமையுடன் வாழவும் உதவி செய்கிறது.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக