உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் அது கவலை அளிப்பதாக அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும் பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர்.
இதற்குஇடையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்தார். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு விலக்கியதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார் .
சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு கொரோனா பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பு மூடி மறைத்து விட்டது என்றும் இதனால் உலக சுகாதார அமைப்புக்கான 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் உத்தரவிட்டார்.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்க்கு நிதியை நிறுத்தியதற்கு பல நாடுகளை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் இது குறித்து கூறுகையில்,இதற்கு கவலை தெரிவிப்பதாகவும்,நிதி இடைவெளிகளை நிரப்பவும், பணிகளை தடையின்றி தொடர்வதற்கும், கூட்டாளர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார் . மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக