அக்சய திருதியை அன்று தங்கத்தை ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என நகை கடையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்சய திருதியையொட்டி ஆன்லைன் மூலம் நகைகளை மக்களுக்கு விற்கும் முயற்சியில் நகைக்கடைகள் ஈடுப்பட்டுள்ளது.
நாளை அக்சய திருதியை என்பதால் இந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே ஆன்லைனில் நகையை புக் செய்தால், ஊரடங்கு முடிந்த பின்னர் நகைகளை நேரில் வாங்கிக்கொள்ளலாம் என விளம்பரம் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக