கொரோனா முழு அடைப்பு காரணமாக பண பறிமாற்றம் இன்றி தவிக்கும் மக்கள் சில கிராமங்களில் மீண்டும் பண்ட மாற்று முறையை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
கொரோனா முழு அடைப்பால் பலர் தங்கள் பணத்தின் பெரும்பகுதியைச் செலவழித்துள்ள நிலையிலும், வேலை தேடி பணத்தை சேகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் நிலையிலும், மக்கள் தற்போது பண்டமாற்று முறையைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை வாங்க துவங்கியுள்ளனர். அரியலூரின் சில கிராமப்புறங்களில் தற்போது பண்டமாற்று முறை கடைப்பிடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணமில்லா பொருளாதாரம் முற்றிலுமாக மறக்கப்படவில்லை என்றாலும், மக்கள் தாங்கள் செலவழிக்கும் பணம் அல்லது பணம் இல்லாததால் பண்டமாற்று முறை அவர்களுக்கு கைகொடுத்து வருகிறது என தெரிவிக்கின்றனர்.
முழு அடைப்பால் பெரும்பாலான மக்கள் மாவட்டத்தில் வேலை இல்லாமல் வீட்டில் உள்ளனர். சிலர் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். கிராமப்புறங்களில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிராமப்புற விவசாயிகள் தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை பண்ட மாற்று முறையில் மற்ற விவசாயிகளிடம் பறிமாற்றம் செய்யத் துவங்கியுள்ளனர்.
காய்கறி, நெல், மிளகாய் போன்ற பொருட்களை அன்றாட தேவைகளுக்கு வாங்க பண்டமாற்று முறை பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து செட்டி திருகோனம் குடியிருப்பாளர் R.ராஜா கூறுகையில், “தற்போது பணப்புழக்கம் குறைவாக உள்ளது, எனது இரண்டு ஏக்கரில் மிளகாய் மற்றும் நிலக்கடலை பயிரிட்டேன், ஆனால் எனக்கு இப்போது நெல் தேவைபடுகிறது. எனவே, 25 கிலோ மிளகாய்க்கு ஈடாக இரண்டரை சாக்கு நெல் வாங்கினேன்.” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பரிவர்த்தனைகளில் நேர்மையை உறுதிசெய்யும் இடைத்தரகர்கள் யாரும் இல்லை. ஊரில் உள்ளவர்கள் பணம் செலுத்துவதற்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகையில், நாங்கள் பழைய வடிவிலான பணமில்லா கட்டணத்திற்கு திரும்பியுள்ளோம், அதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு விவசாயி இதுகுறித்து குறிப்பிடுகையில்., “நான் மிளகாய்க்கு ஈடாக இரண்டரை சாக்கு நெல் கொடுத்தேன். காய்கறிகளையும் பரிமாறிக்கொள்கிறோம். போக்குவரத்து தடைகள் காரணமாக, நாங்கள் வெளியே சென்று எங்கள் பொருட்களை விற்க முடியாது. எனவே, இந்த முறையைப் பயன்படுத்தி அண்டை கிராமம் வரையில் வாங்குகிறோம். எல்லா பகுதிகளிலும் நாணய நெருக்கடி இருப்பதால், பல கிராமங்களில் பண்டமாற்று முறை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் நேரடி கொள்முதல் செய்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக