கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு தேர்வுகள், பள்ளி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தலைமையாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், வெளியிட்ட பொறியியல் கல்லூரி தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையில் ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாதம் நடக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதனை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது. ஊரடங்கு இன்னும் நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக