மதிய நேரத்துக்கு குளிர்ச்சி தரும் 2 நிமிடத்தில் தயாராக்க கூடிய சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பாப்போம்.
தேவையான பொருள்கள்
செய்முறை
- மோர்
- பூண்டு
- இஞ்சி
- கடுகு
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேபிள்ளையை சேர்க்கவும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். அவை லேசாக வதங்கிய பின்பு சீரகம் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காய தூளை சேர்த்து அதனுடன் மோரை கலந்து சூடாகும் வரை விட்டு இறக்கினால் அட்டகாசமான மோர் குழம்பு தயார்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக