Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

ஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை

ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் அழைப்புகளை மேற்கொள்ளவும், குறுந்தகவல்களை அனுப்பவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அழைப்புகளை ஏற்பது மிகவும் எளிய காரியமே. இதற்கு ஸ்கிரீனினை ஸ்வைப் செய்தாலே போதுமானது. எனினும், நெட்வொர்க் பிரச்சனை காரணமாக அழைப்புகளை ஏற்பதில் பலமுறை சிக்கல் ஏற்படும். இங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் அழைப்புகளை ஏற்க முடியாத பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு போன்

முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். சமயங்களில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்தாலே அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். இதனால் மற்ற வழிமுறைகளை பின்பற்றும் முன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. ரீஸ்டார்ட் செய்தும் பிரச்சனை சரியாகவில்லை எனில், அடுத்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

 ஏர்பிளேன் மோட்

நெட்வொர்க் கோளாறு காரணமாக அழைப்புகளை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டால், ஏர்பிளேன் மோடினை ஆஃப் மற்றும் ஆன் செய்யலாம். ஏர்பிளேன் மோட் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும் போது, செக்யூரிட்டி, நெட்வொர்க், செல்லுலார் டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும். பின் இரண்டு நிமிடங்கள் கழித்து ஏர்பிளேன் மோடினை மீண்டும் ஆன் செய்ய வேண்டும். இனி அழைப்புகள் சீராக இயங்கும்.

அழைப்புகளை சரிபார்க்கவும்

அழைப்புகள் வரும் விதம் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் வேறுபடும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் வலது புறம் அல்லது கீழ் இருந்து மேல்புறமாக ஸ்வைப் செய்தாலே அழைப்புகளை ஏற்க முடியும். சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பச்சை நிற பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கலாம். அழைப்புகள் வரும் போது சரியான முறையில் ஸ்வைப் செய்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சிம் கார்டு

மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனில், சிம் கார்டினை கழற்றி பின் மீண்டும் போடலாம். சிம் கார்டினை கழற்றி மீண்டும் மாட்டும் போது நெட்வொர்க் குறைபாடு சரியாகிவிடும். சிம் டிரேவில் இருக்கும் சிம் கார்டினை கழற்றி விட்டு டிரேவினை நன்கு சுத்தம் செய்து பின் மீண்டும் சிம் கார்டினை டிரேவில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அழைப்புகளை ஏற்க முடியாத நிலை சரியாகிவிடும்.

போன் ஆப்

போன் ஆப் ரீசெட் செய்வதன் மூலம் செயலியில் உள்ள அனைத்து டேட்டா மற்றும் கேச்சி உள்ளிட்டவை அழிக்கப்பட்டுவிடும். கேச்சி ஃபைல்கள் அழிக்கப்பட்டுவிட்டால், அழைப்புகளில் உள்ள பிரச்சனை சரியாகி விடும். போன் ஆப் ரீசெட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

- முதலில் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

- பின் போன் ஆப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி ஸ்டோரேஜ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- அடுத்து க்ளியர் டேட்டா மற்றும் க்ளியர் கேச்சி உள்ளிட்ட ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்

- ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்த அழைப்புகளை ஏற்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக