நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தீர்களா? ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதா? இப்போது விமான டிக்கெட்டை பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளீர்களா? உங்களுக்கான முக்கியமான செய்தி இதோ! ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிச் செலுத்துவதை விமான நிறுவனங்கள் மறுத்துள்ளன.
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்தது. அதன் பின்னர், அனைத்து வணிக பயணிகள் சேவைகளும் அது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான நிறுவனங்கள் ரத்து செய்த விமானங்களுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பித் தர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன. அதற்கு பதிலாக, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல், பிற்கால தேதிக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதன் விளைவாக, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் இந்த காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டன. இருப்பினும், ஏப்ரல் 14 க்கு பிறகான காலப்பகுதியில் விமானம் இயக்கப்படும் என தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா தவிர, உள்நாட்டு விமானங்களுக்கான சேவைக்கு பெரும்பாலான விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்தன.
ஆனால் இன்று நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, மே 3 வரை ஊரடங்கு உத்தரவௌ நீட்டிப்பதாக அறிவித்த பின்னர், விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ (DGCA ), அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் அதன் சேவைகளை 2020 மே 3 வரை தடை செய்துள்ளது. மேலும் முன்பதிவுகளை ரத்து செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வேறு தேதிக்கான பயணத்தை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 31, 2020 வரை, "விஸ்டாரா (Vistara ) செய்தித் தொடர்பாளர் ஒருவர், பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் கூறியதில், எவ்வாறாயினும், வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் போது, கட்டணத்தில் அதிக வேறுபாடு இருந்தால், அதை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார்.
ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, GoAir செய்தித் தொடர்பாளர் ஒருவர, "ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்பி அளிக்கப்படாது. ஆனால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் அதே கட்டத்தில் எப்போ வேண்டுமானாலும் பயணம் செய்துக்கொள்ளலாம் என்ற சலுகையை மறுஆய்வு செய்யும் என்றும், தற்போதுள்ள முன்பதிவுகளை ஒரு வருடத்திற்கு பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக