தமிழ் திரையுலகில் வெற்றி வேல் என்னும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய நாயகிதான் நிகிலா விமல். இவர் அதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் தலிகரபம்பா என்ற தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார் நடிகை நிகிலா.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கும் உத்தரவால், பொது மக்களுக்கு பணியாற்ற கால் சென்டரில் பணியாற்ற தன்னார்வ தொண்டர்கள் தேவை என தனக்கு கிடைத்த தகவலை அடுத்து, அந்த விளம்பரத்தின் மூலம் மாவட்ட பஞ்சாயத்து கால்சென்டரில் சம்பளம் எதுவுமே இல்லாமல் தன்னார்வ பணியாளராக சேர்ந்து வேலை செய்து வருகிறார்.
இவரது அர்ப்பணிப்பு பலரையும் பாராட்ட வைத்துள்ளதோடு பலரை வேலை செய்யவும் தூண்டியுள்ளது.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக