கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டும் விதமாக ஜெர்சியை ஏலம் விடுகிறார் இங்கிலாந்து வீரர் பட்லர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு நிதி திரட்டும் விதமாக, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக