வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்கள் தான் இப்போது மிகவும் பிரபலம், எனவே இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்கும் திட்டத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது, ஆனால் இந்த அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்கள் கோபமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்ந நிறுவனம் வாட்ஸ்அப் மொபைல் போன் நம்பர்களை ஃபேஸ்புக்குடன் இணைந்து, வாட்ஸ்அப் அக்கவுண்ட்களில் எதுபோன்ற விளம்பரங்களை பதிவிடலாம் என்பதை முடிவு செய்யும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் பேஸ்புக் நிறுவனத்திற்குள் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்டசத்தில், பெரும்பாலான பயனர்கள் தங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்க வாய்ப்புள்ளது,என பேஸ்புக் நிறுவனம் கருதுவதாக தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது.
மேலும் கடந்த ஆண்டும ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியானது,அதுவும் வாட்ஸ்அப் துணை தலைவர் கிரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பேஸ்புக் நிறுவனம் தனது செயலியில் விளம்பரங்களை வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
பின்பு சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் விளம்பரங்களை வழங்க நியமிக்கப்பட்டு இருந்த
குழுவை களைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் செயலியின் குறியீடுகளில் இருந்து விளம்பரங்களை சேர்க்கும் குறியீடுகளை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இப்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.356 பதிப்பில் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை சேர்க்க செய்யும் குறியீடுகள் எதுவும் இல்லை எனவும், வாட்ஸ்அப் புதிய அம்சங்களை பற்றிய தகவல்களை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக