கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைப் பாராட்டி போடப்படும் மீம்ஸ்களுக்கு அவர் தடை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மருத்துவர்களும் அமைச்சர் விஜயபாஸ்கரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிறப்பாக செயல்படுவதாக அமைச்சரைப் பாராட்டி பல மீம்ஸ்கள் பரப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் செய்தியாளர்களை சந்தித்து எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தன்னைப் பாராட்டும் மீம்ஸ்களை பகிரவேண்டாம் என விஜயபாஸ்கர் தனது உதவியாளர்கள் மூலமாக கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விஜய்பாஸ்கரின் உதவியாளர் ஒருவரின் பதிவு வாட்ஸ் ஆப் குழுக்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக