ஊரடங்கு நேரத்தில் கூட்டமாக நிற்கக் கூடாது என்றும் சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறிய நிலையில் அந்த அறிவுரையை ஏற்காமல் அறிவுரை கூறிய போலீசார்களை விரட்டி விரட்டி பொதுமக்கள் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா என்ற பகுதியில் திடீரென நூற்றுக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்த தொடங்கினார். ஊரடங்கு காரணமாக உணவு உட்பட அடிப்படை தேவை கூட தங்களுக்கு இல்லை என்றும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை நோக்கி வந்த சுமார் 20 போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்களின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் கலைந்து செல்லும்படியும் அவர் வலியுறுத்தினார்
ஆனால் அறிவுரை கூற வந்த போலீசார்களிடம் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசாரை நோக்கி ஆவேசமாக பொதுமக்கள் தாக்கத் தொடங்கியதால் போலீசார் பின்வாங்கி ஓடத் தொடங்கினார். ஓடிய போலீசார்களை விரட்டி விரட்டி பொதுமக்கள் கல்லால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்களை விரட்டி விரட்டி பொதுமக்கள் அடித்தது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக