Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

இண்டர்நெட் கிடைக்கவில்லை: மரத்தில் ஏறி ஆன்லைன் பாடம் நடத்திய ஆசிரியர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தினார். ஆனால் அவரது மொபைல் போனுக்கு அவரது கிராமத்தில் சரியாக இன்டர்நெட் நெட்வொர்க் கிடைக்கவில்லை
இதனால் அவர் சற்றும் யோசிக்காமல் உடனடியாக அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைனில் பாடம் நடத்துகிறார். மரத்தில் உட்காருவதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகளை செய்து கொண்டு காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை அந்த மரத்திலேயே உட்கார்ந்து அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் படிப்புக்காக தான் இவ்வாறு செய்வதாகவும் தனது வீட்டில் எந்த பகுதியிலும் இன்டர்நெட் கிடைக்கவில்லை என்பதால் மரத்தில் ஏறி உட்கார்ந்து தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக பாடம் நடத்துவதாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!