ஹேக்கர்கள் சுமார் 26.7 கோடி பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கடந்த மார்ச் மாதம் விற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 26.7 கோடி பயனர்களின் விபரங்களை 500 யூரோக்கள் என்ற விலையில் டார்க் வெப் தளத்தில் ஹேக்கர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்திய மதிப்பில் தனிநபர் விபரம் ரூ. 41,500 என்று விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முதல் பேஸ்புக் ஐடி வரை திருட்டு
சைபர் இடர் மதிப்பீட்டு தளமான சைபலின் படி, ஹேக்கர்கள் பேஸ்புக் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், பிறந்த தேதி மற்றும் 26.7 கோடி மக்களின் பேஸ்புக் ஐடி விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் விற்பனைக்குக் கொண்டு வந்து அனைவரின் அடையாளங்களையும் அம்பலமாகியுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளது என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் வலைத்தளத்தில் இத்தனை கோடி பயனர்களின் தரவுகள் எவ்வாறு கசிந்தது என்பது யாருக்கும் சரியாக இன்னும் பதில் தெரியவில்லை. இது மூன்றாம் தரப்பு ஏபிஐ (அப்ளிகேஷன் புரோகிராமிங் இடைமுகம்) கசிவு அல்லது ஸ்கிராப்பிங் காரணமாக இருக்கலாம்' என்று சைபிள் தெரிவித்துள்ளது.
ஜூம் பயன்பாட்டு மூலம் நடைபெற்ற தகவல் திருட்டு
பேஸ்புக் மட்டுமல்லாமல், ஜூம் பயன்பாட்டுப் பயனர்களின் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தது. ஒரு ஹேக்கர் அளித்த பேட்டியில் டார்க் வெப் சந்தையில் ஜூம் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை விற்பனைக்குத் தாமே விலைக்கு வாங்கியதாக உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். ஜூம் பயனர்களின் தரவு $ 5,000 (ரூ. 3.81 லட்சம் தோராயமாக) முதல் $ 30,000 (ரூ. 23 லட்சம் தோராயமாக) வரை விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக