சென்னை எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்ஐசி கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீயானது மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியுள்ளது.
இதனால் விரைந்து வந்த தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களின் 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புதுறையினர். இந்த விபத்தில் எல்ஐசி-யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.
விபத்து குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது என தெரியவந்துள்ளது. மேலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக