சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நோக்கியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை Android 10-க்கு புதுப்பிப்பதற்கான புதிய அட்டவணையை HMD குளோபல் பகிர்ந்துள்ளது.
ஆரம்ப அட்டவணை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இருப்பினும், கொரோனா வைரஸ் வெடித்ததன் விளைவாக, அது மாற்றப்பட்டது. என்றபோதிலும் தற்போதைய நிலைமையில் நிறுவனம் புதுப்பிப்புகளை மிக விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 3.2-ஐத் தொடர்ந்து, Android 10 இப்போது நோக்கியா 4.2-க்கு கிடைத்துள்ளது.
நோக்கியா 3.2-ஐப் போலவே, பயனர்கள் எந்த நாடுகளிலிருந்து புதுப்பிப்பைப் பெறுவார்கள் என்பதைக் காட்ட HMD குளோபல் ஒரு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நோக்கியா 4.2 புதுப்பிப்பின் முதல் அலை 43 நாடுகளை உள்ளடக்கியது. இந்த 43 நாடுகளின் பட்டியல் கீழே உங்களுக்காக...
அர்மேணியா | ஆஸ்ட்ரியா | அஜர்பைஜான் | பஹ்ரைன் |
பெலாரஸ் | பெல்ஜியம் | கம்போடியா | டென்மார்க் |
எஸ்டோனியா | பின்லாந்து | பிரான்ஸ் (ஆரஞ்சு FR தவிர) | ஜார்ஜியா |
ஹாங்காங் | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேசியா |
அயர்லாந்து | கஜகஸ்தான் | குவைத் | லாவோஸ் |
லாட்வியா | லிபியா | லிதுவேனியா | லக்சம்பர்க் |
மக்காவ் | மலேசியா | மங்கோலியா | மொராக்கோ |
நெதர்லாந்து | நோர்வே | ஓமான் | போர்ச்சுகல் |
கத்தார் | ரஷ்யா | சவுதி அரேபியா | ஸ்பெயின் |
சுவீடன் | தாய்லாந்து | துனிசியா | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
உக்ரைன் | அமெரிக்கா | யேமன் |
அட்டவணையில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த பயனர்களில் 10% மட்டுமே மேம்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 12-க்குள், 50% பயனர்கள் புதுப்பிப்பைப் பெறுவார்கள், ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் நோக்கியா 4.2-ன் அனைத்து உரிமையாளர்களும் புதுப்பிப்பைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட இந்த புதிய ஃபார்ம்வேர் வெளியீடு HMD குளோபலின் வாக்குறுதியை பூர்த்தி செய்கிறது. இந்த சாதனங்கள் 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் Android 10-ஐப் பெறும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது, எனவே அவற்றின் உரிமையாளர்கள் எதிர்காலத்தில் புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக