Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஏப்ரல், 2020

OnePlus 8, 8 Pro ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஆரம்பம்.!

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு அமேசான் தளத்தில் ஏப்ரல் 28(நேற்று) தொடங்கியது, குறிப்பாக இந்த சாதனங்கள் மே மாதனம் இறுதியில் விற்பனைக்கு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை

வெளிவந்த தகவலின் அடிப்படையில்,

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.41,999-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.44,998-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.49,999-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.54,999-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.59,999-ஆக உள்ளது.

பின்பு ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் ஆனது இந்தியாவில் ரூ.1,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவில் இதன்

விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,800 ஆகும்.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +

8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ

ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்

இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன்

கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ

3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்

128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது

48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா

16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா

2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது

16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா

5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ வைஃபை 6 ப்ளூடூத்

வி 5.1 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

வார்ப் சார்ஜ் 30T (5V / 6A)

4,300 எம்ஏஎச் பேட்டரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக