யமஹா தற்போது தனது புதிய தயாரிப்பு மாடலான ட்யூல்-ஸ்போர்ட் WR 155R மாடலை சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகப்படுயுள்ளது. அதன் சிறப்பமசங்கள் மற்றும் அதன் இந்திய வருகையை பற்றியும் கீழே பார்க்கலாம்...
இந்த புதிய யமஹா WR 155R மாடலானது ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மடலின் திறனை அறியும் டைனோ சோதனையானது விடியோவாக பதியப்பட்டது. அதில் WR 155R மாடலானது எந்தவொரு மாற்றமும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த மாடலில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், முதல் கியரில் அதிகப்பட்சமாக 42 கிமீ வேகத்தையும், இரண்டாவது கியரில் 65 கிமீ வேகத்திலும், மூன்றாவது கியரில் 91 கிமீ வேகத்திலும், நான்காவது கியரில் 110 கிமீ வேகத்திலும், ஐந்தாவது கியரில் 132 கிமீ வேகத்திலும், ஆறாவது கியரில் 151 கிமீ வேகத்திலும் செல்வதை டைனோ சோதனை விடீயோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ட்யூல் ஸ்போர்ட் ரக பைக்கான இதில் அதிகப்பட்சமாக 151 கிமீ வேகத்தில் செல்வது வாகன ஓட்டிகளின் விருப்பத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த மாடலின் இன்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், புதிய WR 155R பைக்கில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. யமஹாவின் R15 வெர்சன் 3 மாடலில் வழங்கப்பட்டிருந்த இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000rpm, 16.7pHp பவரையும், 6,500rpm-இல் 14.3nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இந்த மாடலில் ஒவ்வொரு சக்கரத்திலும் ட்யூல்-பர்பஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா நிறுவனமானது இந்திய சந்தையில் இந்த மாடலை களமிறக்க இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எவ்வாறான தேவைகள் உள்ளது என்பதை பற்றிஆராய்ந்து வருகிறது. ஆதலால் இந்த புதிய யமஹா WR 155R பைக்கானது விரைவில் இந்திய சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக