ஸ்மார்ட் கிளீனிங்கான புதிய தீர்வு
சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது, 'ஒவ்வொரு நாளும் எத்தனை முறை உங்கள் வீட்டை சுத்தம் செய்கிறீர்கள்? அதை நீங்களே செய்யாமல், அதைச் செய்து முடிக்க வலி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியுடன், உங்கள் ஸ்மார்ட் ஹோம் தேவைக்கான ஸ்மார்ட் கிளீனிங் தீர்வு நாளை அறிமுகம் செய்யப்படும்', என்று அந்த பதிவில் சியோமி பதிவுசெய்துள்ளது.
சீனாவில் இருக்கும் ரோபோ வேக்கம் கிளீனர்
சியோமி ஏற்கனவே சீனாவில் ரோபோ வேக்கம் கிளீனர்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . வெளியிடப்பட்டுள்ள படத்தைப் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்த மாடலுடன் ஒத்துப்போகும் குறிப்பிட்ட சீனா ரோபோ வேக்கம் கிளீனர் மாடலின் விலை ரூ.20,000 ஆக இருக்கிறது.
ஸ்மார்ட் ஹோம் சந்தையிலும் சியோமி
அதனால் இதன் விலையும் அதை ஒற்றியே இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி தனக்கென்று தனி இடைத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல், இந்திய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் சந்தையிலும் சியோமி நிறுவனம் தனக்கென்ற ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.
நாளை அறிமுகமாகும் ரோபோ வேக்கம் கிளீனர்
சியோமி நிறுவனம் இந்த ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை நாளை வெளியிடும் என்று தேதியை அறிவித்துள்ளதால், இது பற்றிய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, அதேபோல் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இந்த புதிய சாதனம் சேர்க்கப்படும் என்பது தெளிவாகிறது.
இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்குமா?
சியோமி நிறுவனம் ஏற்கனவே சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், சியோமி ஸ்மார்ட் எல்.ஈ.டி லேம்ப்ஸ், ஸ்மார்ட் பெட்சைட் லேம்ப் மற்றும் இன்னும் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனையும் செய்து வருகிறது. சியோமி தனது ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை நமது நாட்டில் அறிமுகம் செய்வது முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் வரவேற்கப்படலாம் என்று சியோமி கருதுகிறது.
விற்பனைக்கு எப்பொழுது கிடைக்கும்?
ரோபோ வேக்கம் கிளீனர் தயாரிப்பு நாளை அறிமுகம் செய்யப்பட்டாலும், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் எப்பொழுது கிடைக்குமென்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், சியோமி இந்தியாவின் ஆன்லைன் வலைத்தளத்தின் கீழ் உள்ள ஸ்மார்ட் ஹோம் பிரிவின் கீழ் இந்த சாதனம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக