Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 மே, 2020

வெறும் ரூ.11,700 க்கு 43-இன்ச் Full-HD டிவி; இது கனவா? இல்ல நிஜமா!

சியோமி நிறுவனம் அதன் E தொடர் ஸ்மார்ட் டிவி வரிசையின் கீழ் ஒரு புதிய டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது அது MI TV E43K ஆகும். இந்த புதிய சியோமி மி டிவி இ43கே மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக தோராயமாக ரூ .11,700 ஆகும்.
இதன் பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த லேட்டஸ்ட் மி டிவி ஆனது 43 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 1920x1080 பிக்சல்கள் என்கிற அளவிலான திரை தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இந்த மி டிவி 178 டிகிரி கோணத்துடன் வருகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, டி.வி.எஸ் 2.0 உடன் இரண்டு 8W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

புதிய Mi TV E43K ஆனது ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாகக் கொண்ட பேட்ச்வால் கொண்டு இயங்குகிறது, இது கன்டெட் உடன் லோட் செய்யப்பட்ட intuitive interface -ஐ சேர்க்கிறது.

பின்னடைவாக இந்த மி ஸ்மார்ட் டிவி ஆனது ப்ளூடூத் இணைப்பைக் கொண்டிருக்கவில்லை, எனவே இந்த புதிய மாடல் ப்ளூடூத் ரிமோட்டிற்கு பதிலாக ஸ்டாண்டர்ட் இன்ப்ராரெட் (அகச்சிவப்பு) ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்துகிறது.

இந்த மி டிவி இ 43 கே மாடலானது டூயல் கோர் ப்ராசஸர் மூலம் 1.4GHz க்ளாக் ஸ்பீட் மற்றும் மாலி -450 எம்பி 2 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது வைஃபை, இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஏ.வி. போர்ட் மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

சமீபத்தில் சியோமி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட UI உடனான பேட்ச்வால் 3.0 ஐ இந்தியாவில் உள்ள மி டிவிகளுக்கு வெளியிடத் தொடங்கியது. இந்த புதிய பேட்ச்வால் 3.0 ஆனது மி டிவி 4 ஏ, மி டிவி 4 சி ப்ரோ, மி டிவி 4 ஏ ப்ரோ, மி டிவி 4 ப்ரோ, மி டிவி 4 எக்ஸ், மற்றும் மி டிவி 4 எக்ஸ் ப்ரோ போன்ற மி டிவிகளுக்கு அணுக கிடைக்கிறது.

இதற்கிடையில் சியோமி நிறுவனம் அதன் புதிய ரெட்மி டிவி எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை வருகிற மே 26 அன்று அறிமுகப்படுத்த உள்ளது.

சீன ஊடக தளமான வெய்போ வழியாக பகிரப்பட்ட ரெட்மி டிவி மாடல்களுக்கான டீஸர் வழியாக, ரெட்மி டிவி எக்ஸ் 50 எனப்படும் 50 இன்ச் மாடலும், ரெட்மி டிவி எக்ஸ் 55 எனப்படும் 55 இன்ச் மாடலும், ரெட்மி டிவி எக்ஸ் 65 எனப்படும் 65 இன்ச் மாடலும் அறிமுகம் ஆகும்.

இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளின் மூலைகளும் மிகவும் மெல்லிய பெஸல்களை கொண்டுள்ளன. மேலும் இந்த மூன்று ரெட்மி டிவி மாடல்களுமே பெரும்பாலும் ஒரே வடிவமைப்பு மொழியைப் பின்பற்றும் என்றே தோன்றுகிறது. மேலும் அவைகள் ஒரே மாதிரியான அம்சங்களுடன் வரக்கூடும், ஆனால் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் முக்கிய வேறுபாடாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக