Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

மீண்டும் 15 லிருந்து 30 ஆக உயர்த்திய வாட்ஸ் அப்.! இதை செய்தால் மட்டுமே, அது நடக்கும்.!

வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோ நேர அளவை மீண்டும் 15 வினாடிகளில் இருந்து 30 வினாடிகளாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மொபைல் மற்றும் டேட்டா அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா குறித்து தவறான தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதனை நிறுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் செல்போன் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டது. 

தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் வீடியோ ஸ்டேட்ஸ் நேர அளவை குறைப்பதாக அறிவித்தது. அதாவது, 30 வினாடிகளில் இருந்து 15 வினாடியாக குறைக்கப்பட்டது. வாட்ஸ் அப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதனால் வாட்ஸ் அப் பயனாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோ நேர அளவை மீண்டும் 15 வினாடிகளில் இருந்து 30 வினாடிகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் மட்டுமே இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக