>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 14 மே, 2020

    இந்தியன் 2: அட இதுவும் வந்தியாம்யா- கடுப்பில் லைகா, கமல் ரசிகர்கள்

    indian 2

    கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படம் இரண்டு பாகங்களாக வெளியாகப் போகிறது என்கிற தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் சென்னையில் இரண்டு இடங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் எடிட்டிங்கின்போது இதுவரை எடுத்த காட்சிகளே 5 மணிநேரம் ஓடியதை பார்த்து ஷங்கர் வியந்ததாகவும், அதனால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. எடிட்டிங் வேலை துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பை மீண்டும் துவங்குவோம் என்று லைகாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்தியன் 2 பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு பாகங்கள் தகவலுக்கு முன்பாக இந்தியன் 2 படத்தை கைவிட லைகா திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின. அதை பார்த்த லைகாவோ, அப்படி எந்த திட்டமும் இல்லை, படத்தை நிச்சயம் வெளியிடுவோம் என்று விளக்கம் அளித்தது.

    இந்தியன் 2 குறித்து ஏதாவது வதந்தி பரவுவதும் அதை மறுத்து லைகா விளக்கம் அளிப்பதும் வழக்கமான விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வதந்திகளால் லைகா நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. யார் தான் இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுகிறார் என்றே தெரியவில்லையே என கமல் ஹாஸன் ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர்.

    இந்தியன் 2 வருவதே ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி. அது இரண்டு பாகங்களாக வந்தாலும் சந்தோஷம் தான் என்று இருந்தார்கள். ஆனால் அது பொய்யென்று தற்போது தெரிய வந்துள்ளது.

    முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் செட் போட்டு சண்டை காட்சியை படமாக்கியபோது கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கமலும், காஜல் அகர்வாலும் நூலிழையில் உயிர் பிழைத்தார்கள்.

    இந்த கிரேன் விபத்தால் கமல், காஜல், ஷங்கர் பேரதிர்ச்சி அடைந்தனர். அந்த விபத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்கவில்லை. பின்னர் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படிப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. விபத்தால் நின்றுபோன இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடருமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இந்நிலையில் லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பு நிச்சயம் துவங்கும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது கமல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்தியன் 2 பற்றி மட்டும் அல்ல கமல் ஹாஸன் பற்றியும் கூட அண்மையில் வதந்தி பரவியது. அதாவது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று கமல் கூறிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிகழ்ச்சி கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது. ஆனால் பிக் பாஸ் 4 கைவிடப்படவில்லை என்றும், கமல் தான் தொகுத்து வழங்குகிறார் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக