இதன் காரணமாக தற்போது சில கட்டுப்பாடுகளூடன் சில துறைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
இதில் ஏற்கனவே நலிவடைந்த வாகனத் துறைக்கும் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
3 மாத இஎம்ஐ தொகையினை நிறுவனமே செலுத்தும்
இதனையடுத்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளாரான ஹூண்டாய் நிறுவனம், விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி புதிய தாக கார் வாங்கும் ஒருவர், தற்போது வேலையினை இழந்துள்ளார் எனில் அவருக்கு, மூன்று மாத இஎம்ஐ தொகையினை நிறுவனமே செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது.
இதற்கு பொருந்தாது
மேலும் இந்த மாதம் வாங்கும் அனைத்து புதிய ஹூண்டாய் கார்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் ஸ்ரீ ராம் பொது காப்பீட்டு நிறுவனத்தால் எழுதப்பட்டுள்ளதாகவும் பிசினஸ் டுடே செய்தியில் வெளியாகியுள்ளது. எனினும் இந்த அதிரடியான திட்டம் ஹூண்டாயின் பிரிமீயம் வரம்பான கிரெட்டா, எலன்ட்ரா, டியூசன் மற்றும் கோனா எலக்ட்ரிக் போன்றவற்றிற்கு பொருந்தாது எனவும் அறிவித்துள்ளது.
மூன்று மாதத்திற்கு நிவாரணம் அளிக்கும்
அதோடு வாடிகையாளர் வேலையை இழந்துள்ளார் என்பதற்கு தேவையான ஆவணத்தை வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்காள் மிக மோசமான நிதி நிலைமையில் இருக்கும் இந்த நிலையில் கூட கார்களை வாங்க பயன்படும். உதாரணத்துக்கு மே மாதம் ஒருவர் கார் வாங்குகிறார் என்றால், அவருக்கு ஆகஸ்ட் மாதம் வரையில் நிவாரணம் அளிக்கும். ஆக இந்த மாதத்தில் கார் வாங்கும் எவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் திறப்பு
எல்லா வற்றையும் விட கார் வாங்குவதற்கு கூடுதல் செலவுகள் இல்லை என்றும் அறிவித்துள்ளது. நாடு முழுவதில் சில நகரங்களில், அதாவது சிவப்பு பகுதிகளில் இன்னும் எந்த டீலர்ஷிப்புகள் திறக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதிலும் சுமார் 246 டீலர்ஷிப்புகள் மற்றும் 255 பட்டறைகள் மட்டுமே தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக