Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

ஒரே வீடியோ காலில் , 3700 ஊழியர்களின் வேலையை காலி செய்த UBER நிறுவனம்


முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் காரணமாக பொருளாதார தாக்கம் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சியமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக உபர் நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.  இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 14 சதவீதத்தினர் ஆவர்.

இவர்களை 3 நிமிட ஜீம் வீடியோ கால் மூலமாக UBER தலைமையகத்தில் இருந்து '' இன்று உபருடன் உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும் என குறிப்பிட்டு 3700 ஊழியர்கள்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இதுகுறித்து  உபர் தலைமையகத்தின்  பீனிக்ஸ் மையத்தின் தலைவர் ராஃபின் சாவேலியோ  வீடியோ காலில் பேசுகையில் , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உபரின் சவாரி வணிகம் பாதிக்கு மேலாக குறைந்துவிட்டது. மேலும், கடினமான மற்றும் துரதிர்ஷ்ட்டவசமான உண்மை என்னவென்றால் எங்கள் ஊழியர்களுக்கு போதுமான வேலை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் நிறுவனத்தின் இ-பைக்குகள்,  இ-ஸ்கூட்டர்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக