Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

கடந்த மாதம் 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்து இழப்புகளை ஓரளவு குறைத்த பஜாஜ் நிறுவனம்.!

கடந்த மாதம் பஜாஜ் இருசக்கர வாகன ஏற்றுமதியானது 32,009ஆக உள்ளது. பஜாஜ் ஆட்டோ பிரிவு ஏற்றுமதியானது இந்த வருடம் 5,869ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்இந்த எண்ணிக்கை 5 இல் ஒரு பகுதியே ஆகும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு பொதுமக்களை பெருமளவு பாதித்தது. மேலும் பல்வேறு தொழில்நிறுவனங்களும் பெருமளவு பாதிப்பை சந்தித்தன. அதில், ஆட்டோமொபைல் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. 

கடந்த மாதம் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையில் பெரும் இழப்பை சந்தித்து, இதுவரை இந்தியவில் ஆட்டோமொபைல் சந்தை சந்தித்திராத பூஜ்ஜியம் வாகன விற்பனையை கடந்த மாதம் பெற்றது. இதுவரை கடந்த 40 நாட்களில் ஒரு வாகனம் கூட விற்பனையாக வில்லை.

இதில் பஜாஜ் நிறுவனம் விற்பனையில் பூஜ்ஜியம் என்றாலும் வாகன ஏற்றுமதியில் ஓரளவு கணிசமான வாகனங்களை ஏற்றுமதி செய்து இழப்பை ஓரளவு ஈடுகட்டியுள்ளது. 

கடந்த மாதம் பஜாஜ் இருசக்கர வாகன ஏற்றுமதியானது 32,009ஆக உள்ளது. இதுவே கடந்த வருடம் 1,60,393ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, பஜாஜ் ஆட்டோ பிரிவு ஏற்றுமதியானது இந்த வருடம் 5,869ஆக உள்ளது. ஆனால், சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 30,818ஆக உள்ளது. ஆக மொத்தம் இந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இல் ஒரு பகுதியே ஆகும். 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இருக்கும் தொழிற்சாலையிலும், உத்திரகாண்டில் உள்ள ருத்ராபூரில் உள்ள தொழிற்சாலையிலும் பஜாஜ் நிறுவனம் தனது உற்பத்தியை குறைந்தளவுக்கேனும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த மாதம் ஏற்பட்ட இழப்பை பஜாஜ் நிறுவனம் ஓரளவு சரி செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக