Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

டிவி சீரியல் ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி: ஆனால் இந்த 8 கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்

Govt allows TV Serial Shooting


சில கட்டுப்பாடுகள் உடன் சீரியல்களின் ஷூட்டிங்கை மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா மற்றும் சீரியல்கலின் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக தொலைக்காட்சி அனைத்தும் புதிய நிகழ்ச்சிகளை ஷூட் செய்ய முடியாமல் போனது. அதனால் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

தற்போது அரசு படிப்படியாக லாக்டவுனை விலக்கி வரும் நிலையில் சில துறைகளுக்கு அனுமதி அளித்து வருகிறது. சென்ற வாரம் படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. அது போல சினிமா மற்றும் சீரியல்களில் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று சீரியல்களின் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசு சில கட்டுப்பாடுகள் உடன் அனுமதி அளித்துள்ளது.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவை தான்..
1.      சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் (Indoor Shooting Only) படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (Containment Zones) இது பொருந்தாது.
2.      பொது இடங்களில் படப்பிடிப்பு நடந்தக்கூடாது . எனினும் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடந்த தடை ஏதும் இல்லை.
3.      பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது
4.      படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
5.      படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவேளையின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.
6.      படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
7.      படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதே போன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அணைத்து சாதனங்களையும் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
8.      சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இத்தனையும் பின்பற்றி இனி ஷூட்டிங் நடத்தி டிவியில் ஒளிபரப்பு செய்யலாம். இதனால் நாளை முதல் அனைத்து சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அனுமதி அளித்துள்ளதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


அரசு தற்போது சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக பணி இன்றி வருமானம் இன்றி இருந்த தொழிலாளர்கள் பலருக்கும் இதன் மூலம் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சீரியல்களுக்கு அனுமதி கொடுத்தாலும் அரசு இன்னும் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கவில்லை. 600 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு சினிமா துறையில் கொரோனா லாக் டவுனால் முடங்கி உள்ளது என குறிப்பிட்டு தயாரிப்பாளர்களும் தமிழக முதலமைச்சர் இடம் கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக