தமிழகத்தில்
பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு மே 27 முதல் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசு ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு பொது
தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு,
குறிப்பாக 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களின் முக்கியத்துவம், மாணவர்கள் புதிய
பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வை எழுதியதால் முந்தையதை விட கடுமையானதாக
கருதப்படுகிறது. 12 ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2 முதல் 24 வரை நடைபெற்றது,
இந்த தேர்வில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
ஏப்ரல்
இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு,
கொரோனா முழு அடைப்பின் காரணமாக முழுமையாக தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்வு
தாள்களை திருத்தும் பணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
"மே
27 முதல் மதிப்பீட்டிற்கான புதிய அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விடை
தாள்களை திருத்தும் பணிகள் ஜூன் முதல் வாரம் வரை செல்லும்," என்று விஷயங்களை
நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். "பணிகளை தொடங்குவதற்கு,
விடைத்தாள்கள் அந்தந்த மண்டலங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, மாற்றப்பட்டு
பின்னர் மதிப்பீட்டிற்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கடுமையான
பாதுகாப்புக்கு மத்தியில் முகாம்கள் செயல்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொழித்
தாள்கள் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், மதிப்பீட்டு
செயல்முறை தொடங்குவதற்கு முன்பு மீதமுள்ள இரண்டு நாட்களில் கடுமையான
பாதுகாப்புக்கு இடையில் மாற்றப்படும் என்று தெரிவிக்கின்றார்.
"எட்டு
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சுமார் 50 லட்சம் விடைத்தாள்களை மதிப்பிட
வேண்டும், இதற்காக 25,000-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள்
பயன்படுத்தப்படுவார்கள்," என்றும் அவர் கூறினார்.
உயர்
படிப்புகளுக்கான சேர்க்கை பெற 12-ஆம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் மிகவும்
முக்கியமானது என்பதால், தேர்வு இயக்குநரகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில்
மதிப்பீடு செய்யப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு
குறிப்பிட்ட பாடத்திற்கான மதிப்பீடு முடிந்ததும், அதே நாளில் மதிப்பீட்டின்
தகவல்கள் உடனடியாக மத்திய சேவையக அமைப்பில் பதிவேற்றப்படும் என்றும் அவர்
குறிப்பிடுகிறார்.
"இந்த
ஆண்டு பாதுகாப்பை வலுப்படுத்த, மதிப்பீட்டு மையங்களில் CCTV கேமராக்கள்
நிறுவப்படும், இது சென்னையில் உள்ள தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளால்
கண்காணிக்கப்படும்," என்றும் அவர் கூறினார். விடைத்தாள் தரவு அடங்கிய
குறுவட்டு ஜூன் முதல் வாரத்திற்குள் இயக்குநரகத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்
என்றும், ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
12-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 16-ஆம் தேதி
நடைபெறும் என்றும், எனவே, அந்த மாணவர்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடு
தேர்வுக்குப் பிறகு தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக