முகக்கவசம் அணிந்திருக்கும் போது
மொபைல் போனில் பேஸ் லாக் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. மாஸ்க்
அணிந்திருக்கும் போது இனி அந்த தொல்லை இருக்காத வகையில் ஐபோன் அப்டேட்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது
கட்டாயம்
அதேபோல் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது
கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
முகக்கவசம் அணிந்திருக்கும் போது மொபைல் போனில் பேஸ் லாக் எடுப்பதில் சிரமம்
ஏற்பட்டிருக்கிறது.
ஐஓஎஸ் அப்டேட்
இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும்
வகையில் ஐஓஎஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் ஐஓஎஸ் 13.5 அப்டேட்டின்
மூலம் பேஸ் ஐடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்பெறுவர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்த பிறகு கேமராவில் பேஸ் ஐடி ஸ்கேன்
செய்யும்போது முகக்கவசம் அணிந்திருப்பது கண்டறியப்பட்டால் தானாக பாஸ்வேர்டு
கேட்கும்.
ஏணைய சிறு பிரச்னைகளுக்கு தீர்வு
காணப்படும்
முன்பாகவே அறிவித்தது போல் கூகுளுடன்
இணைந்து ஆப்பிள் முன்னெடுக்கும் கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கான API இதில் இடம்பெறும்.
இதோடு இந்த அப்டேட்டின் மூலம் சிறுகுறு கோளாறுகள் சரி செய்யப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் விரைவில் வெளிவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் அறிவிப்பு ஐபோன் வாடிக்கையாளர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக