Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 மே, 2020

கொரோனா வைரஸ் விவகாரம்... பிரதமரின் நிவாரண நிதிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிதியுதவி...

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது. 

இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்கள்  தங்களால் இயன்ற அளவு  நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்தியாவில் தனி நபர்கள், குழந்தைகளின் சேமிப்பு பணம்,  தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இராணுவ வீரர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைதுறையினர்  என  பலர் நிதி வழங்கி வருகின்றனர். 

இதேபோல், பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களும், தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.2.5 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!